கருவேல மரம் ஏலம் எடுக்க கொடுத்த ரூ.2 லட்சத்தை திருப்பி தர மறுத்தவரை காரில் கடத்திய 4 பேர் கைது


கருவேல மரம் ஏலம் எடுக்க கொடுத்த ரூ.2 லட்சத்தை திருப்பி தர மறுத்தவரை காரில் கடத்திய 4 பேர் கைது
x
தினத்தந்தி 16 Oct 2019 10:30 PM GMT (Updated: 16 Oct 2019 10:16 PM GMT)

கருவேல மரம் ஏலம் எடுக்க கொடுத்த ரூ.2 லட்சத்தை திருப்பி தர மறுத்தவரை காரில் கடத்தி சென்ற திண்டுக்கல்லை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை,

திண்டுக்கல் மாவட்டம் செந்துரை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 33). இவர் கருவேல மரங்களை ஏலம் எடுத்து வெட்டும் தொழில் செய்து வருகிறார்.

இவர் சிவகங்கை அருகே ஒரு கண்மாயில் அரசு ஏலம் விட்ட கருவேல மரங்களை ஏலத்தில் எடுப்பதற்காக சிவகங்கையை அடுத்த சக்கந்தி கிராமத்தை சேர்ந்த வீரபாண்டி(50) என்பவரிடம் கடந்த 5 மாதத்திற்கு முன்பு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்திருந்தாராம்.

ஆனால் அந்த கண்மாயில் இருந்து கருவேல மரம் வெட்ட அனுமதி வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் அவர் வீரபாண்டியிடம் தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டார். பலமுறை கேட்டும் வீரபாண்டி பணத்தை திரும்ப தரவில்லையாம்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு செல்வராஜ் மற்றும் வெள்ளைச்சாமி(34), சிவா(47), அய்யப்பன்(32) ஆகிேயார் ஒரு காரில் வீரபாண்டியை கடத்தி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர் உத்தரவின்பேரில் சிவகங்கை டவுன் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் ஆகியோர் காரை மடக்கி பிடித்து அதில் இருந்த வீரபாண்டியை மீட்டனர்.

இதுதொடர்பாக சிவகங்கை டவுன் ேபாலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜ், வெள்ளைச்சாமி, சிவா, அய்யப்பன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story