பி.எம்.சி. வங்கியை பொதுத்துறை வங்கியுடன் இணைக்க வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
பி.எம்.சி. வங்கியை பொதுத்துறை வங்கியுடன் இணைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியை சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
மும்பை,
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கியில், ரூ.4 ஆயிரத்து 355 கோடி அளவுக்கு முறைகேடு நடந்து உள்ளது. இதை தொடர்ந்து அந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி முடக்கியது. மோசடி தொடர்பாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளன.
மேலும் வங்கி முறைகேடு தொடர்பாக பி.எம்.சி. வங்கியின் முன்னாள் தலைவர், முன்னாள் நிர்வாக இயக்குனர், எச்.டி.ஐ.எல். ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குனர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முறைகேடு நடந்த பி.எம்.சி. வங்கியை பொதுத்துறை அல்லது தனியார் வங்கியுடன் இணைக்க வேண்டும் என சிவசேனா ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக சிவசேனாவை சேர்ந்த மத்திய மந்திரி அரவிந்த் சாவந்த், எம்.பி.க்கள் கஜானன் கிரித்திகர், ராகுல் செவாலே, அனில் தேசாய் ஆகியோர் ரிசர்வ் வங்கி அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், பி.எம்.சி. வங்கியை பொதுத்துறை வங்கியுடன் இணைக்க ரிசர்வ் வங்கி பரி சீலனை செய்ய வேண்டும். இல்லையெனில் ஐ.சி.ஐ.சி.ஐ. போன்ற தனியார் வங்கியுடன் இணைக்க வேண்டும் என்றனர்.

Related Tags :
Next Story