திலக்நகரில் பரிதாபம்; மகள் காணாமல் போன விரக்தியில் தந்தை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
மகள் காணாமல் போன விரக்தியில் ரெயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவம் திலக்நகரில் நடந்து உள்ளது.
மும்பை,
மும்பை செம்பூர் தக்கர்பாபா காலனியை சேர்ந்தவர் பாஞ்சராம் (வயது40). இவர் தனது மனைவி, மகன் சுனில் மற்றும் 17 வயது மகளுடன் அங்குள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மகள் திடீரென காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே தனது மகளை யாரோ கடத்தி சென்றுவிட்டதாக அங்குள்ள போலீஸ் நிலையத்தில் பாஞ்சராம் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடிவந்தனர்.
மகள் காணாமல் போன நாளில் இருந்து பாஞ்சராம் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பாஞ்சராம் தனது மகன் சுனிலை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, தான் திலக்நகர் ரெயில் நிலையத்தில் நிற்பதாகவும், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் பதற்றம் அடைந்த சுனில் ரெயில் நிலையத்துக்கு விரைந்தார். இதற்கிடையே பாஞ்சராம் அந்த வழியாக வந்த மின்சார ரெயில் முன் பாய்ந்தார். இதில், படுகாயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இந்தநிலையில் அங்கு வந்த சுனில் தனது தந்தை படுகாயங்களுடன் கிடப்பதை கண்டு கதறி அழுதார். இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் அவரை மீட்டு சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை நடத்திய டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story