பிரம்மதேசம் அருகே இளம்பெண், வி‌ஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை


பிரம்மதேசம் அருகே இளம்பெண், வி‌ஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 18 Oct 2019 3:00 AM IST (Updated: 17 Oct 2019 7:35 PM IST)
t-max-icont-min-icon

பிரம்மதேசம் அருகே பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரம்மதேசம்,

பிரம்மதேசம் அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ் விவசாயி. இவருக்கு புவனேஸ்வரி(வயது 27) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த புவனேஸ்வரி வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி புவனேஸ்வரி உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது தந்தை ரூபலிங்கம் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரி உடல்நலக்குறைவு காரணமாக வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story