மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் + "||" + Grievance Day Meeting for Disabled Persons

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும்நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கரூர்,

கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும்நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். முகாமில் சிறப்பு சக்கர நாற்காலி, பார்வையற்றோருக்கான நவீன ஊன்றுகோல், பிரெய்லி கடிகாரம், பராமரிப்பு உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை, பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் வீட்டுமனை பட்டா என பல்வேறு வகை மனுக்கள் பெறப்பட்டன. உதவி உபகரணங்கள் கேட்டு விண்ணப்பித்த நபர்களுக்கு உடனடியாக அவர்களுக்கான உபகரணங்களை வழங்கிடவேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், 5 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையும், ஒரு பயனாளிக்கு ரூ3,400 மதிப்பிலான அதிரும் மடக்குகோல், நல்ல நிலையில் உள்ள நபர் மாற்றுத் திறனாளியை திருமணம் செய்து கொண்டமைக்காக 2 பயனாளிக்கு ரூ.37,500 மதிப்பிலான தேசிய சேமிப்பு பத்திரமும், 2 பயனாளிக்கு ரூ.470 மதிப்பிலான நவீன மடக்கு கோல், ஒரு பயனாளிகளுக்கு ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டையும் உடனடியாக வழங்கப்பட்டன. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜான்சி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. வணிக நிறுவனங்களில் ஊரடங்கு விதிமுறைகளை வியாபாரிகள் முறையாக பின்பற்ற வேண்டும் கலெக்டர் வலியுறுத்தல்
வணிக நிறுவனங்களில் ஊரடங்கு விதிமுறைகளை வியாபாரிகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று தர்மபுரி கலெக்டர் மலர்விழி வலியுறுத்தி உள்ளார்.
2. பெரம்பலூரில் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்
பெரம்பலூரில் கொரோனா வைரசை தடுக்கும் விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை டாக்டர்களுக்கு கலெக்டர் உத்தரவு
மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டுள்ளார்.
4. கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியுடன் இணைக்கும் விவகாரம்: முதல்-அமைச்சர் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பார்
கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியுடன் இணைப்பது குறித்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் தீர்க்கமான நடவடிக்கையை மேற்கொள்வார் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
5. வங்கி கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மீண்டும் டெல்லி சென்று விவசாயிகள் நிர்வாண போராட்டம் நடத்த முடிவு
வங்கி கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மீண்டும் டெல்லி சென்று விவசாயிகள் நிர்வாண போராட்டம் நடத்த முடிவு செய்து இருப்பதாக அய்யாக்கண்ணு கூறினார்.