வேதாரண்யம் அருகே, மீன்பிடிக்க சென்ற மீனவர் மாரடைப்பால் சாவு
வேதாரண்யம் அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர் மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார்.
வேதாரண்யம்,
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் மீன்பிடி சீசன் தொடங்கி மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. இங்கு பல்வேறு ஊர் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடிதொழில் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி பெருமாள்பேட்டை மாணிக்கப்பங்கு பகுதியை சேர்ந்த பாண்டியன் (வயது35) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அதே ஊரை சேர்ந்த காத்தலிங்கம் (75), ஆறுமுகம் (65), ஜெகதீசன் (28) மற்றும் பாண்டியன் ஆகிய 4 பேரும் பேரும் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் 4 பேரும் மீன்பிடித்துவிட்டு நேற்று அதிகாலையில் கரை திரும்பினர். அனைவரும் படகில் இருந்து இறங்கினர். அப்போது காத்தலிங்கம் மட்டும் படகில் தூங்கி கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீனவர்கள் எழுப்ப முயன்றனர். அப்போது அவர் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும சப்–இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்குப் பதிவு செய்து காத்தலிங்கத்தின் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார். மீன்பிடிக்க சென்ற போது மீனவர் மாரடைப்பால் இறந்த சம்பவம் அந்தபகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story