போலீஸ் துறையை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில் போலீஸ் துறையை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்,
கும்பகோணத்தில் வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். செயலாளர் தரணிதரன், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.
வக்கீல் ராஜ்குமாரை கத்தியால் குத்த வந்த கும்பகோணம் பைராகித்தோப்பு பகுதியை சேர்ந்த ஒருவர் மீது கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே போலீஸ் துறையை கண்டித்து இன்றும், நாளையும் (அதாவது நேற்று மற்றும் இன்று) கோர்ட்டை புறக்கணிப்பதும். இனியும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 21-ந் தேதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடுத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு போலீஸ் துறையை கண்டித்து கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் கூட்டு நடவடிக்கைக் குழு துணை தலைவர்கள் ராஜசேகர், சங்கர் உள்பட திரளான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story