கும்பகோணத்தில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு செவிலியர் தற்கொலைக்கு முயற்சி


கும்பகோணத்தில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு செவிலியர் தற்கொலைக்கு முயற்சி
x
தினத்தந்தி 19 Oct 2019 3:30 AM IST (Updated: 18 Oct 2019 10:53 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு செவிலியர் தற்கொலைக்கு முயன்றார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

கும்பகோணம்,

கும்பகோணம் டாக்டர் மூர்த்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி அன்புக்கரசி (வயது 50). இவர், கும்பகோணம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மகப்பேறு செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் ஜோதி, கிருத்துவமேரி ஆகியோரும் வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் அன்புக்கரசியின் கையில் காயம் ஏற்பட்டு இருந்ததால் தான் பூர்த்தி செய்ய வேண்டிய மகப்பேறு பதிவேடுகளை மற்றொரு செவிலியரை கொண்டு பூர்த்தி செய்து தலைமை செவிலியரின் பார்வைக்கு அனுப்பி உள்ளார். இதனை அறிந்த ஜோதி மற்றும் கிருத்துவமேரி ஆகியோர் அன்புக்கரசியிடம், நீ செய்ய வேண்டிய வேலைகளை வேறு ஒருவரை ஏன் செய்ய சொல்கிறாயா? எனக்கூறி அவரை தரக்குறைவாக பேசி, ஒரு அறைக்குள் அழைத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த அன்புக்கரசி நேற்று தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த அன்புக்கரசியின் உறவினர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story