நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் - கலெக்டர் ஷில்பா உத்தரவு
நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று முதல் நாளை மறுநாள் வரை 3 நாட்களுக்கு மூடப்படும் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை,
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது. தேர்தல் பிரசாரம் இன்று (சனிக்கிழமை) மாலையுடன் முடிவடைகிறது.
இந்த தேர்தலையொட்டி இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை நெல்லை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் நடத்தப்படும் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும், அதனுடன் இணைந்த மதுக்கடை பார்களும், உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்களும் மூடப்படும்.
இதேபோல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகின்ற 24-ந்தேதியும் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை மீறி யாராவது மது விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story