விஷம் குடித்து தீயணைப்பு வீரர் தற்கொலை


விஷம் குடித்து தீயணைப்பு வீரர் தற்கொலை
x
தினத்தந்தி 18 Oct 2019 11:15 PM GMT (Updated: 18 Oct 2019 7:21 PM GMT)

பெருந்துறையில் விஷம் குடித்து தீயணைப்பு வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

பெருந்துறை,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்தவர் மணி (வயது 57). ஈரோடு மாவட்டம் சென்னிமலை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக வேலை பார்த்து வந்தார். பெருந்துறை வெங்கமேட்டில் தங்கிக்கொண்டு வேலைக்கு சென்று வந்தார். வயிற்றுபுண்ணால் கடந்த சில நாட்களாக மணி அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். இதைத்தொடர்ந்து நேற்று காலை விஷம் குடித்துவிட்டார்.

அதன்பின்னர் மணி பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு சென்று, 'நான் விஷம் குடித்துவிட்டேன். என்னை காப்பாற்றுங்கள் என்று கூறினார்.

உடனே அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் அவரை 108 ஆம்புலன்சில் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேந்று பகல் 12 மணி அளவில் இறந்துவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பெருந்துைற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.

தற்கொலை செய்துகொண்ட மணிக்கு பிரேமா (50) என்ற மனைவியும், தம்பித்துரை (26) என்ற மகனும், வித்யா (24), பவித்ரா(22) என்ற மகள்களும் உள்ளனர்.

தம்பித்துரை திருப்பூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணியாற்றுகிறார். இவர்கள் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த மணியின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story