மாவட்ட செய்திகள்

வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது + "||" + Another woman arrested for killing couple

வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது

வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது
வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 15 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வெள்ளகோவில்,

திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம் அருகே உள்ள தாசநாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). நிதி நிறுவன அதிபர். இவருடைய மனைவி வசந்தாமணி(42). இவர்கள் மதுரை ஆரப்பாளையத்தில் வசித்து வந்தனர்.

கணவன்- மனைவி இருவரும் தங்களது மகன் பாஸ்கரனின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர். இந்தநிலையில் செல்வராஜ் தனது மனைவியை அழைத்துக்கொண்டு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தாண்டகுமார வலசை சேர்ந்த தனது அக்காள் கண்ணம்மாள்(54) வீட்டுக்கு வந்தார்.


அதன்பிறகு இருவரும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தியதில் சொத்து தகராறு காரணமாக கண்ணம்மாள், அவருடைய மருமகன் நாகேந்திரன், அவரது நண்பர் இளங்கோ ஆகியோர் சேர்ந்து செல்வராஜ், வசந்தாமணியை கொலை செய்து கண்ணம்மாளின் வீட்டுக்கு அருகே புதைத்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் கண்ணம்மாள், நாகேந்திரன், இளங்கோ ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கொலையான தம்பதியிடம் இருந்து 15 பவுன் நகையை எடுத்து கண்ணம்மாள் தனது மகளான பூங்கொடியிடம்(32) கொடுத்தது தெரியவந்தது. பின்னர் கைதான 3 பேரையும் கோவை சிறையில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து வெள்ளகோவில் போலீசார், பூங்கொடியை கைது செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில், 15 பவுன் நகையை அவர் ஈரோட்டில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்து ரூ.2 லட்சம் பெற்றது தெரியவந்தது. அந்த நகையை போலீசார் மீட்டனர்.

ஏற்கனவே தாயார், கணவர் சிறையில் உள்ள நிலையில் பூங்கொடியும் கைது செய்யப்பட்டுள்ளார். சொத்து பிரச்சினைக்காக தம்பதியை கொலை செய்து ஒரு குடும்பமே சிறைக்கு சென்றுள்ளனர். இந்த சம்பவம் வெள்ளகோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அனாமிகா சுக்லா வழக்கு; போலி ஆவணங்களை பயன்படுத்திய மற்றொரு ஆசிரியை கைது
அனாமிகா சுக்லா வழக்கில் போலி ஆவணங்களை பயன்படுத்திய மற்றொரு ஆசிரியை இன்று கைது செய்யப்பட்டு உள்ளார்.
2. வெள்ளகோவில் அருகே 2 நூற்பாலைகளில் பயங்கர தீவிபத்து - பல கோடி ரூபாய் எந்திரங்கள், பஞ்சுகள் எரிந்து நாசம்
வெள்ளகோவில் அருகே 2 நூற்பாலைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள், பஞ்சுகள் எரிந்து நாசம் அடைந்தன.
3. வெள்ளகோவிலில் நூல்மில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன்நகை திருட்டு - 4 ஆசாமிகள் கைவரிசை
வெள்ளகோவிலில் மில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை திருடி சென்ற 4 ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
4. சிங்கப்பூரில் இருந்து கடத்தல்: மதுரை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல் - ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் கைது
சிங்கப்பூரில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தி வந்த பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.