கடையின் சுவரை துளை போட்டு செல்போன் திருடிய வழக்கில் 3 பேர் கைது


கடையின் சுவரை துளை போட்டு செல்போன் திருடிய வழக்கில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2019 3:45 AM IST (Updated: 20 Oct 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஆரம்பாக்கம் பஜாரில் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். கடையின் சுவரை துளை போட்டு செல்போன் திருடிய வழக்கில் 3 பேர் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே வசித்து வருபவர் பீட்டர் (வயது 50). இவர் ஆரம்பாக்கம் பஜாரில் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். கடந்த மாதம் இவரது கடையின் பின்பக்க சுவரை துளைபோட்டு அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள செல்போன் மற்றும் மடிக்கணினி போன்றவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததனர்.

இந்த நிலையில், இந்த திருட்டு வழக்கு தொடர்பாக ஆரம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமி காந்தன்(வயது24), ராஜேஷ்(24), நொச்சிக்குப்பத்தை சேர்ந்த அஜித்குமார்(26) ஆகியோரை ஆரம்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 29 செல்போன்கள் மற்றும் 2 மடிக்கணினி போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

Next Story