திருப்பூர் மாநகர பகுதிகளில் மது விற்ற 8 பேர் கைது


திருப்பூர் மாநகர பகுதிகளில் மது விற்ற 8 பேர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2019 4:00 AM IST (Updated: 20 Oct 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகர பகுதிகளில் மதுவிற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 216 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் மாநகர பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் ரோந்து சுற்றி கண்காணித்தனர்.

அப்போது புது பஸ் நிலையம் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மதுவிற்ற புதுக்கோட்டையை சேர்ந்த முத்து பழனி(வயது37), பூலுவப்பட்டி டாஸ்மாக் கடை அருகே மதுவிற்ற நாகையை சேர்ந்த சிவா(43), பெரியபாளையம் டாஸ்மாக் கடை அருகே மதுவிற்ற சிவகங்கையை சேர்ந்த பழனி (37), பிச்சாம்பாளையம்புதூர் டாஸ்மாக் கடை அருகே மதுவிற்ற தஞ்சையை சேர்ந்த மணிகண்டன்(23), மில்லர் டாஸ்மாக் கடை அருகே மதுவிற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த முருகன்(24), அங்கேரிபாளையம் டாஸ்மாக் கடை அருகே மதுவிற்ற புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டி(27) ஆகியோரை கைது செய்தனர்.

இதேபோல் திருப்பூர் தெற்கு போலீசார் நடத்திய சோதனையில் தாராபுரம் ரோடு டாஸ்மாக் கடை அருகே மதுவிற்ற புதுக்கோட்டையை சேர்ந்த அன்புமணி(52), பழைய பஸ் நிலையம் டாஸ்மாக் கடை அருகே மதுவிற்ற சிவகங்கையை சேர்ந்த தங்கபாண்டி(33) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 216 மதுபாட்டில்களை போலீசாா் பறிமுதல் செய்தனர்.

Next Story