குமரி மாவட்டத்தில் பலத்த மழை: சிற்றார்-2 அணைப்பகுதியில் 12 செ.மீ. பதிவு


குமரி மாவட்டத்தில் பலத்த மழை: சிற்றார்-2 அணைப்பகுதியில் 12 செ.மீ. பதிவு
x
தினத்தந்தி 20 Oct 2019 3:15 AM IST (Updated: 20 Oct 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சிற்றார்-2 அணைப்பகுதியில் 12 செ.மீ. மழை பதிவானது.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று மாலையில் நாகர்ே்காவில் உள்ளிட்ட குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஆறுகள், கால்வாய்கள் போன்றவற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நாகர்கோவில் அருகே உள்ள சபரி அணை, குமரி அணை, சோழன்திட்டை அணை போன்றவற்றில் மறுகால் மூலமும், மடைகள் வழியாகவும் வெள்ளம் பாய்ந்தோடியது. செட்டிகுளம் பகுதியில் உள்ள குளத்தில் இருந்து செல்லும் கால்வாயின் கரை உடைந்ததால் செந்தூரான் நகர் பகுதியில் புகுந்த மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்தது. இதேேபால் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தெருக்களிலும் மழை வெள்ளம் பாய்ந்தோடியது.

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் இந்த அருவியில் தண்ணீர் குறைவாக விழுந்த பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்தனர். அதிகமாக விழும் பகுதிகளில் குளிக்க அனுமதிக்கவில்லை. கனமழையால் வாரியூர் அரசு உயர்நிலை பள்ளியை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், பள்ளி மாணவ-மாணவிகள் அவதியடைந்தனர்.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்ட பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை- 12.2, பெருஞ்சாணி- 3.2, சிற்றார் 1- 27.8, சிற்றார் 2- 118, புத்தன் அணை- 3, மாம்பழத்துறையாறு- 14, பொய்கை- 4, முக்கடல் அணை- 4.3, பூதப்பாண்டி- 4.6, களியல்- 12.6, கொட்டாரம்- 7, குழித்துறை- 6.5, மயிலாடி- 9.2, நாகர்ே்காவில்- 2, சுருளக்கோடு- 17.6, ஆரல்வாய்மொழி- 4, கோழிப்போர்விளை- 7, அடையாமடை- 3, ஆனைக்கிடங்கு- 15.2 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக சிற்றார்-2 அணைப்பகுதியில் 118 மி.மீ. (12 செ.மீ.) மழை பதிவாகி இருந்தது.

இந்த மழையின் காரணமாக நேற்று பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 189 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 114 கன அடி யும், சிற்றார்-1 அணைக்கு 391 கன அடியும், சிற்றார்-2 அணைக்கு 295 கன அடியும், பொய்கை அணைக்கு 6 கன அடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 26 கன அடியும், முக்கடல் அணைக்கு 2 கன அடியும் தண்ணீர் வந்தது.

மழையால் மேலும் 3 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அதாவது நாகர்கோவில் கம்போளம் பகுதியில் நேற்று ஒரு வீடு இடிந்து விழுந்தது. விளவங்கோடு பகுதியில் 2 வீடுகள் சேதம் அடைந்தன.

Next Story