என்னை ஒதுக்கிவிட்டு பிறந்தநாள் கொண்டாட்டமா? வக்கீலை கத்தியால் வெட்டிய தம்பி
என்னை வீட்டில் சேர்க்காமல் ஒதுக்கி வைத்துவிட்டு, நீ மட்டும் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடுகிறாயா? என வக்கீலான தனது அண்ணனை கத்தியால் வெட்டிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்,
சென்னை திருவொற்றியூர் அம்பேத்கர் நகர், 8-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன்கள் மணிகண்டன்(வயது 31) மற்றும் விக்னேஷ்(27). இவர்களில் மணிகண்டன் வக்கீல் ஆவார்.
இளைய மகன் விக்னேசின் நடவடிக்கை பிடிக்காததால், அவரை சண்முகம் வீட்டுக்குள் சேர்க்காமல் ஒதுக்கிவிட்டதாக தெரிகிறது. இதற்கிடையில் மூத்த மகன் மணிகண்டனுக்கு பிறந்தநாள் வந்தது. பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து அவர் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு வந்த விக்னேஷ், “என்னை வீட்டில் சேர்க்காமல் ஒதுக்கி வைத்துவிட்டு நீ மட்டும் உனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுகிறாயா? எனக்கேட்டு தனது அண்ணன் மணிகண்டனுடன் தகராறு செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் அண்ணன் என்றும் பாராமல் மணிகண்டனை சரமாரியாக வெட்டினார். இதில் தலை, முகம், கை உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. உடனடியாக அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மணிகண்டனுக்கு தலையில் 4 தையல் போடப்பட்டன.
இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story