திருத்துறைப்பூண்டியில் பேரிடர் பாதுகாப்பு மையங்களை கலெக்டர் ஆய்வு


திருத்துறைப்பூண்டியில் பேரிடர் பாதுகாப்பு மையங்களை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Oct 2019 3:45 AM IST (Updated: 20 Oct 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் பேரிடர் பாதுகாப்பு மையங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைய தொடங்கி உள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளாங்காடு, கற்பகநாதர்குளம், இடும்பாவனம் ஆகிய பகுதிகளில் உள்ள பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையங்களை மாவட்ட கலெக்டர் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் குடிநீர், மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பேரிடர் காலங்களில் மக்களை தங்க வைப்பதற்குரிய அனைத்து முன் ஏற்பாடு பணிகளையும் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என அவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது அவர் அங்குள்ள குடிநீர் தொட்டி தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? என பார்வையிட்டார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, தாசில்தார் ராஜன்பாபு, தனி தாசில்தார் உதயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story