இரு கட்சிகளையும் புறக்கணித்து வாக்காளர்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் - கண்ணன் பேச்சு
இரு கட்சிகளையும் புறக்கணித்து வாக்காளர்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கண்ணன் பேசினார்.
புதுச்சேரி,
புதுவை காமராஜ் நகர் தொகுதி மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிசெல்வத்தை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் கண்ணன் நேற்று காமராஜ் நகரில் திறந்த ஜீப்பில் நின்று வீதி வீதியாக சென்று வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
காமராஜ் நகரில் உள்ள வாக்காளர்கள் இரு கட்சிகளையும் புறக்கணித்து நல்ல முடிவினை எடுக்கவேண்டும். ஒரு பக்கம் ஆட்சியாளர்களின் சாதனை என்ன என்பதை நீங்கள் யோசித்து பார்க்கவேண்டும். தொகுதியை ஏலம் விடுகிற கெட்டிக்கார தனத்தையும், சாமார்த்தியத்தையும் அதிகமாக வைத்து இருக்கிறார்கள்.
பணத்தை வைத்து ஆள்பிடித்து அடியாட்களை இறக்குமதி செய்கிறார்களே தவிர வேறு என்ன செய்கிறார்கள் என்பதை யோசித்து பார்க்கவேண்டும். சாதாரண மழைக்கே இந்த தொகுதி தாங்கவில்லை. இதை தடுத்து நிறுத்துவதற்கு என்ன திட்டம் வைத்துள்ளனர்?
ஓட்டு வாங்குவதால் மட்டும் ஒருவர் சாதனையாளராகி விட முடியாது. அந்த ஓட்டை போட்ட மக்களுக்கு என்ன செய்தார்? என்பதிலேதான் அவருடைய சாதனை அடங்கி உள்ளது. எதிரணியில் யாரை தேர்ந்தெடுத்தாலும் நமது கதி அதே கதிதான். இவர்களுடைய பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் எப்படி நடந்துகொண்டார்கள்? எந்தெந்த வேலைக்கெல்லாம் கமிஷன் கேட்டார்கள் என்பதை யோசித்து பார்க்கவேண்டும்.
ரங்கசாமிக்கு கட்சி நடத்த தெரியவில்லை. வேட்பாளர்களையும் நிறுத்த தெரியவில்லை. ஆதிக்கம் மட்டும்தான் செலுத்துகிறார். தான் மட்டும் உட்கார்ந்துகொண்டு எல்லோரையும் நிற்க வைத்து பேசுவதுதான் ரங்கசாமியின் குணம். ஆனால் இப்போது வீதியிலே இறங்கி நடக்கிறார். இது வேஷமா? தான் வாழும் ஊருக்கு ஒரு காசுகூட ஒதுக்காதவர்தான் முதல்-அமைச்சர் நாராயணசாமி.
அரும்பார்த்தபுரத்திலே அருங்காட்சியகமாக காட்சி அளிக்கிற கட்டி முடிக்கப்படாத பாலம், அதிலே எதையாவது நீங்கள் கையை வைத்தீர்களா? அதை செய்ய முயற்சி எடுத்தீர்களா? அது ஏன் காட்சிப் பொருளாக நிற்கிறது?
ஒரு அமைச்சர் பேனர் வைப்பதிலே வல்லமை காட்டுகிறார். 6 ஆயிரம் பேனர் என்று மார்தட்டி கொள்கிறார். ஒரு அமைச்சர் கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டுகிறேன் என்கிறார். நான் கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் ஆதரவு இல்லை.
புதுச்சேரி முழுவதும் நடையாய் நடந்து, பாதயாத்திரை செய்த நான் கேட்கிறேன். தேர்தல் வந்ததால்தானே உங்களது இந்த யாத்திரை? மக்களுக்காக குரல் கொடுப்பது, போராடுவது, பிரச்சினைகளை தட்டிக்கேட்பது இவற்றையெல்லாம் நாங்கள்தான் செய்தோம்.
இவ்வாறு கண்ணன் பேசினார்.

Related Tags :
Next Story