கன்னட ராஜ்யோத்சவா தினத்தையொட்டி நன்னடத்தை அடிப்படையில் 141 கைதிகள் நாளை விடுதலை; மாநில அரசு நடவடிக்கை
கர்நாடகத்தில் கன்னட ராஜ்யோத்சவா தினத்தையொட்டி நன்னடத்தை அடிப்படையில் 141 கைதிகள் நாளை (திங்கட்கிழமை) விடுதலை செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்துள்ள கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் ஆண்டுதோறும் கன்னட ராஜ்யோத்சவா தினத்தையொட்டி விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டும் கன்னட ராஜ்யோத்சவா வருகிற நவம்பர் 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
அதன்படி மாநிலத்தில் உள்ள மத்திய சிறைகளில் இருந்து 141 ஆயுள் தண்டனை கைதிகள் நாளை(திங்கட் கிழமை) விடுதலை செய்யப் படுகிறார்கள். கவர்னர் வஜூபாய் வாலா ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து 141 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான விழா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் அன்றைய தினம் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் மட்டும் இயங்கும் ‘சமுதாய வானொலி‘ திட்டத்தை மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார். இதுதவிர சிறப்பாக பணியாற்றிய போலீஸ்காரர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் மற்றும் முதல்-மந்திரி பதக்கமும் வழங்கப்படுகிறது. அதன்பிறகு சிறையை மந்திரி பசவராஜ் பொம்மை ஆய்வு செய்கிறார்.
Related Tags :
Next Story