ரூ.10 லட்சம் செம்மரக்கட்டைகள் சிக்கின


ரூ.10 லட்சம் செம்மரக்கட்டைகள் சிக்கின
x
தினத்தந்தி 21 Oct 2019 3:15 AM IST (Updated: 20 Oct 2019 11:57 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு அருகே ரூ.10 லட்சம் செம்மரக்கட்டைகள் சிக்கின.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் கிராமத்தில் பள்ளிப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட கார் ஒன்று எதிரே வந்தது. அந்த காரை நிறுத்தும்படி போலீசார் சைகை செய்தனர்.

ஆனால் போலீசாரை கண்டதும் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டினார். இதனால் போலீசார் காரை துரத்திச் சென்றனர். வேகமாக சென்ற கார், நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த சுவரில் மோதி பள்ளத்தில் இறங்கியது. காரை ஓட்டி வந்தவர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். பின்பு போலீசார் காரை சோதனை செய்தனர்.

அதில் 500 கிலோ எடையுள்ள 12 செம்மரக்கட்டைகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.10 லட்சம் என மதிப்பிடப்பட்டது. சுவரில் மோதியதில் கார் சேதம் அடைந்தது. காருடன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு பள்ளிப்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்தவரை தேடி வருகின்றனர். செம்மரக்கட்டைகள் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story