கும்பகோணம் அருகே, சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 1,200 மதுபாட்டில்கள் பறிமுதல் - 2 பேர் கைது
கும்பகோணம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 1,200 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர். தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பனந்தாள்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சேங்கனூர் பகுதியில் திருப்பனந்தாள் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தினர். இதனால் சரக்கு வாகனத்தில் இருந்து ஒருவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதை தொடர்ந்து சரக்கு வாகனத்தில் சோதனை செய்தனர். இதில் 1,200 மதுபாட்டில்கள் இருந்தது.இதை தொடர்ந்து சரக்கு வாகனத்தில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திருப்பனந்தாள் அருகே திருவாய்பாடியைச் சேர்ந்த அரவிந்த் (வயது24) மற்றும் சந்தோஷ் (19) என்பதும், இவர்கள் புதுச்்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து சரக்கு வாகனத்தையும், 1,200 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்த், சந்தோஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story