வலங்கைமான் ஒன்றியத்தில், டெங்கு கொசு ஒழிப்பு முன்னேற்பாடு பணிகள்
வலங்கைமான் ஒன்றியத்தில் டெங்கு கொசு ஒழிப்பு முன்னேற்பாடு பணிகள் நடந்தன.
வலங்கைமான்,
வலங்கைமான் ஒன்றியத்தில் 50 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் டெங்கு கொசு ஒழிப்பு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆவூர் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு முன்னேற்பாடு பணிகள் மற்றும் தூய்மை பணிகள் நடந்தன. அப்போது ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் குப்பைகளை அகற்றி சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளை ஒன்றிய ஆணையர் சிவக்குமார் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
வலங்கைமான் ஒன்றியத்தில் அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் தேங்காமல் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அரசு கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
ஊரக பகுதிகளிலும், பொது இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் குப்பைகளை தேங்கவிடாமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த அனைத்து ஊராட்சி செயலாளர்கள், தூய்மை காவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பணிகளில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி செயலாளர், தூய்மை காவலர்கள், மகளிர் குழுவினர் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story