288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் மராட்டிய சட்டசபைக்கு இன்று வாக்குப்பதிவு பாதுகாப்புக்காக 3 லட்சம் போலீசார் குவிப்பு
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாதுகாப்புக்காக 3 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை,
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய மாநில சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 9-ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்படி மராட்டிய சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று(திங்கட்கிழமை) தேர்தல் நடக்கிறது.
மாநிலத்தில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது.
இந்த தேர்தலை ஆளும் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஒரு அணியாகவும், பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் சந்திக்கின்றன.
இதுதவிர ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி மற்றும் ஒவைசி தலைமையிலான எம்.ஐ.எம். கட்சியும் தேர்தல் களத்தில் உள்ளன.
மாநிலம் முழுவதும் மொத்தம் 3 ஆயிரத்து 237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 235 பேர் பெண்கள். அரசியல் கட்சிகள் சார்பில் பா.ஜனதா 164, சிவசேனா 124, காங்கிரஸ் 147, தேசியவாத காங்கிரஸ் 121, நவநிர்மாண் சேனா 101, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 16, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 8, பகுஜன் சமாஜ் கட்சி 262 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
சுயேச்சை வேட்பாளர்கள் 1,400 பேர் களத்தில் உள்ளனர். மேலும் அங்கீகாரம் இல்லாத கட்சிகளின் வேட்பாளர்களும் போட்டியில் உள்ளனர்.
இவர்களில் பா.ஜனதாவை சேர்ந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரிகள் அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான், யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே, பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட், தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித் பவார் ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்கள் ஆவர்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி வர்ஷா கெய்க்வாட்டும், சிவசேனா சார்பில் ஆஷிஸ் வசந்த் மோரேவும் போட்டியிடுகிறார்கள். சயான் கோலிவாடா தொகுதியில் பா.ஜனதா சார்பில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் சார்பில் கணேஷ்குமார் ஆகிய தமிழர்கள் களம் இறக்கப்பட்டு உள்ளனர்.
288 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரையிலும் வாக்காளர்கள் ஓட்டு போடலாம். மாநிலம் முழுவதும் 96 ஆயிரத்து 661 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளில் சுமார் 8.98 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுகிறார்கள்.
வாக்குப்பதிவுக்கு 1 லட்சத்து 79 ஆயிரத்து 895 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 1 லட்சத்து 26 ஆயிரத்து 505 கன்ட்ரோல் யூனிட்களும் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் முதல் முறையாக மராட்டிய சட்டசபை தேர்தலில் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் வி.வி.பாட் ஒப்புகை சீட்டு எந்திரங்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 21 பயன்படுத்தப்பட உள்ளன.
வாக்குப்பதிவின் போது முறைகேடுகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும் பதற்றமானவை என கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகள் உள்பட 9 ஆயிரத்து 673 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு ‘வெப் கேமரா' மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
மாநிலம் முழுவதும் மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் தேர்தல் பணியை மேற்கொள்கிறார்கள்.
தேர்தல் அமைதியாக நடக்கும் வகையில் மாநிலம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மும்பையில் 36 தொகுதிகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதேபோல நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணியில் மாநிலம் முழுவதும் 3 லட்சத்துக்கும் அதிகமான போலீசார், துணை ராணுவத்தினர், மத்திய ரிசர்வ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, அதிவிரைவு படையினர், ஊர்க்காவல் படையினர் ஈடுபட உள்ளனர்.
மாநில தலைநகர் மும்பையில் மட்டும் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
இதுபோல 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் 150 பெண்கள் உள்பட மொத்தம் 1,169 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 1 கோடியே 83 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்காக 19 ஆயிரத்து 578 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இங்கு ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஜனநாயக் ஜனதா ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கு போட்டியிடும் வேட்பாளர்களில் முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் (கர்னால்), எதிர்க்கட்சி தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா (கர்கி சம்ப்லா கிலோய்), காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா (கைதால்), ஜனநாயக் ஜனதா தலைவர் துஷ்யந்த் சவுதாலா (உச்சனா கலன்), இந்திய தேசிய லோக்தளம் கட்சியைச் சேர்ந்த அபய்சிங் சவுதாலா (எலனாபாத்), மாநில பாரதீய ஜனதா தலைவர் சுபாஷ் பராலா (தோகனா) ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
இந்த இரு மாநிலங்களிலும் இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த உடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்படுகின்றன.
இரு மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். அப்போது, இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது தெரிந்துவிடும்.
மராட்டியம், அரியானா மாநிலங்களின் சட்டசபை தேர்தலுடன் நாடு முழுவதும் தமிழ்நாடு (2), உத்தரபிரதேசம் (11), குஜராத் (6), கேரளா (5), பீகார் (5), அசாம் (4), பஞ்சாப் (4), சிக்கிம் (3), ராஜஸ்தான் (2), இமாசலபிரதேசம் (2), புதுச்சேரி, தெலுங்கானா, மத்தியபிரதேசம், மேகாலயா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சத்தீஷ்கார் (தலா ஒரு தொகுதி) ஆகிய மாநிலங்களில் உள்ள 51 சட்டசபை தொகுதிகளுக்கும், மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா நாடாளுமன்ற தொகுதிக்கும், பீகார் மாநிலம் சமஸ்திபூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளும் 24-ந் தேதி எண்ணப்படும்.

Related Tags :
Next Story