நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்து மகாசபை ஆட்சிக்கு வந்திருந்தால் ஜனநாயகம் இருந்திருக்காது தினேஷ் குண்டுராவ் பேச்சு


நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்து மகாசபை ஆட்சிக்கு வந்திருந்தால் ஜனநாயகம் இருந்திருக்காது தினேஷ் குண்டுராவ் பேச்சு
x
தினத்தந்தி 22 Oct 2019 5:25 AM IST (Updated: 22 Oct 2019 5:25 AM IST)
t-max-icont-min-icon

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்து மகாசபை ஆட்சிக்கு வந்திருந்தால் ஜனநாயகம் இருந்திருக்காது என்று தினேஷ் குண்டுராவ் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் சார்பில் ‘பிரேரனா‘ மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் அல்லாமல், இந்து மகாசபை ஆட்சிக்கு வந்திருந்தால் இந்நேரம் ஜனநாயகம் இருந்திருக்காது. சர்வாதிகார மனப்பான்மை கொண்டு ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபை, இந்த நாட்டை வேறு திசையில் கொண்டு சென்றிருப்பார்கள். நாட்டில் ஒற்றுமை, நல்லிணக்கம் அழிந்துபோய் இருக்கும்.

மோடி போன்றவர்கள் பிரதமராகி இருக்க முடியாது. தற்போதைய இளம் சமுதாயத்தினரிடையே மகாத்மா காந்தி மற்றும் நேரு பற்றி எதிர்மறையான கருத்துகள் நிலவுகின்றன. அவர்கள் 2 பேரும் இன்னும் இருந்திருந்தால், இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் இந்தியாவில் இருந்திருக்கும். இந்தியா அகண்ட நாடாக அமைந்திருக்கும்.

நாட்டை உருவாக்கியபோது, தலைவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டனர். ஆனால் இப்போது சுலபமாக குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். நாட்டை காங்கிரஸ் கட்டமைத்ததால் தான் இன்று மோடி பிரதமராகி இருக்கிறார். இப்போது அவர் காங்கிரசுக்கு எதிராக பேசி வருகிறார். காந்தியின் போராட்ட சக்தி நமக்கு முன் உதாரணமாக அமைய வேண்டும்.

வீர்சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக பா.ஜனதா சொல்கிறது. வருகிற காலத்தில் காந்தியை கொலை செய்த கோட்சேவுக்கும் அந்த விருது வழங்கப்படும் என்ற ரீதியில் ஒரு மந்திரி பேசுகிறார். நாடு எங்கே போய் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. இவ்வாறு தினேஷ் குண்டுராவ் பேசினார்.

காங்கிரஸ் பிரசார குழு தலைவர் எச்.கே.பட்டீல் கலந்து கொண்டு பேசுகையில், “காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்துகொள்ளும் காலம் இது. செல்வ வாழ்க்கையை துறந்து எளிமையாக வாழ்ந்து மறைந்த காந்தியின் தத்துவங்களை அனைவரும் பின்பற்ற வேண்டும். மது வியாபாரிகளுக்கு இடம் வழங்கும் கலாசாரத்தை கைவிட வேண்டும்“ என்றார்.

முன்னாள் மந்திரி ராமலிங்கரெட்டி பேசும்போது, “காங்கிரஸ் கட்சி இந்த நாட்டுக்கு ஆற்றிய சேவையை மூடிமறைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது. நாட்டில் அனைத்து பகுதிகளிலும் வேலையின்மை தாண்டவமாடுகிறது. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் அதற்கு நேர் எதிராக ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் பறிபோய் கொண்டிருக் கின்றன“ என்றார்.

Next Story