நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது மும்பையில் இருந்து சென்ற பஸ் விபத்தில் 3 பேர் பலி 14 பேர் படுகாயம்


நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது மும்பையில் இருந்து சென்ற பஸ் விபத்தில் 3 பேர் பலி 14 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 22 Oct 2019 6:24 AM IST (Updated: 22 Oct 2019 6:24 AM IST)
t-max-icont-min-icon

மும்பை-புனே நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள், 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

புனே,

மும்பையிலிருந்து 35 பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று கோலாப்பூர் நோக்கி மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது நேற்று அதிகாலை 4 மணியளவில் காம்சேத் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பஸ் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் பஸ்சில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தலேகாவில் உள்ள ஆஸ்பத்திாிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பஸ் டிரைவர் மோகன் ஆனந்த்லால் (வயது 35), சம்பாஜி சிவாஜி (45), பாண்டுரங் பாட்டீல் (65) ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 14 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தினால் நேற்று அதிகாலை மும்பை-புனே விரைவு சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

Next Story