திருமங்கலம் அருகே நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி கிளீனர் சாவு
திருமங்கலம் அருகே சாலையோரம் பஞ்சராகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் கிளீனர் பரிதாபமாக இறந்துபோனார். டிரைவர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.
திருமங்கலம்,
பெங்களூருவில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வெங்காய மூடைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மதுரை வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை தர்மபுரியை சேர்ந்த டிரைவர் ரஞ்சித்(வயது 30) என்பவர் ஓட்டிச் சென்றார். அதில் கிளீனராக அதே பகுதியை சேர்ந்த சக்திவேல்(25) என்பவர் வந்தார். அவர்கள் வந்த லாரி திருமங்கலம் அருகே கள்ளிக்குடி பகுதியில் வந்தபோது, டயர் பஞ்சராகி நின்றது. இதனால் லாரியை விட்டு இறங்கி ரஞ்சித்தும், சக்திவேலும் டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே திருமங்கலத்தில் இருந்து நெல்லை நோக்கி மற்றொரு லாரி வந்தது. அந்த லாரியை டிரைவரான மற்றொரு சக்திவேல் ஓட்டி வந்தார். இந்த லாரி கள்ளிக்குடி அருகே வந்தபோது, அங்கு பஞ்சராகி நின்றிருந்த வெங்காய மூடைகள் ஏற்றிய லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மற்றொரு சக்திவேல் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். மேலும் லாரி மோதியதில் டயரை மாற்றி கொண்டிருந்த ரஞ்சித்தும், கிளீனர் சக்திவேலும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.
இந்த விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கிளீனர் சக்திவேல் பரிதாபமாக இறந்துபோனார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கள்ளக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story