என்.ஆர்.சி.யை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி


என்.ஆர்.சி.யை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x
தினத்தந்தி 23 Oct 2019 3:30 AM IST (Updated: 22 Oct 2019 10:44 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் என்.ஆர்.சி.யை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் என்.ஆர்.சி.யை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சேகரித்து வருகிறோம்

கர்நாடகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) கணக்கெடுப்பு திட்டத்தை கைவிடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த கணக்கெடுப்பை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை. இந்த என்.ஆர்.சி. கொள்கையை மத்திய அரசு முடிவு செய்கிறது. கர்நாடகத்தில் தற்போது நாங்கள் இது தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம்.

இந்த விவரங்களை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்புவோம். இந்த விஷயத்தில் உள்துறை மந்திரி இறுதி முடிவை எடுப்பார். காவல் மையம் அமைக்கும் முடிவு வேறுபட்டது. பாஸ்போர்ட் காலம் முடிவடைந்த பிறகு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மற்றும் சட்டப்படி ஆவணங்கள் இல்லாதவர்களுக்கும் இந்த காவல் மையம் அமைக்கப்படுகிறது. அந்த காவல் மையத்தில் இருந்து, வெளிநாட்டினர் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

விசாரணை நடக்கிறது

உப்பள்ளி ரெயில் நிலையத்தில் குண்டு வெடித்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஆந்திரா மற்றும் மராட்டிய மாநில போலீசாருடனும் நாங்கள் பேசி வருகிறோம். இன்னும் யாரையும் கைது செய்யவில்லை. அந்த குண்டு எங்கிருந்து வந்தது என்பது பற்றி விசாரணை நடக்கிறது. விசாரணை முடிவடையும் வரை மற்ற தகவல்களை கூற முடியாது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story