வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் படுத்திருக்கும் மாடுகள் வாகன ஓட்டிகள் அவதி
வண்டலூர், வாலாஜாபாத் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் படுத்திருக்கும் மாடுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 6 வழிப்பாதை சாலைகளில் முக்கிய சாலையாக வண்டலூர்- வாலாஜாபாத் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் நாள் தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் வாகனம் வந்து செல்கிறது. இந்த சாலையில் படப்பை, செரப்பனஞ்சேரி, கரசங்கால், ஒரகடம் போன்ற பகுதிகளில் மாடுகள் அதிகமாக சுற்றி திரிகிறது. மேலும் சாலையின் நடுவில் அதிக அளவில் மாடுகள் படுத்து கொள்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும் சாலையின் திருப்பத்தில் வாகனங்கள் திரும்ப முடியாத நிலையே உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அகற்ற தக்க நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story