கணவர் குடித்து விட்டு தகராறு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


கணவர் குடித்து விட்டு தகராறு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 23 Oct 2019 3:45 AM IST (Updated: 22 Oct 2019 11:56 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம், கணவர் குடித்து விட்டு தகராறு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம், மாந்தங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிகிருஷ்ணன் (வயது 34). இவரது மனைவி கலைச்செல்வி(30). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதி மதுரவாயல், லட்சுமி நகர் பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில், முனி கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் முனிகிருஷ்ணன் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி குழந்தை இல்லாததால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதமும் ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் முனிகிருஷ்ணன் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட கலைச்செல்வி அவரது அறைக்கு தூங்க சென்றார். இதையடுத்து, நேற்று காலை முனி கிருஷ்ணன் எழுந்து பார்த்தபோது, கலைச்செல்வி தூக்குப்போட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்த கலைச்செல்வி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கலைச்செல்விக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முனிகிருஷ்ணன் அடித்து துன்புறுத்தியதால் தான் தங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டதாக கலைச்செல்வியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story