குடிமராமத்து பணிகளை இந்த வாரத்திற்குள் முடிக்க வேண்டும்; விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டத்தில் கோட்டாட்சியர் உத்தரவு


குடிமராமத்து பணிகளை இந்த வாரத்திற்குள் முடிக்க வேண்டும்; விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டத்தில் கோட்டாட்சியர் உத்தரவு
x
தினத்தந்தி 22 Oct 2019 10:45 PM GMT (Updated: 22 Oct 2019 6:42 PM GMT)

குடிமராமத்து பணிகளை இந்த வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டத்தில் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை விவசாயிகள் முறையீட்டுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் ஆர். ரவிக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியவிவரம் வருமாறு :-

தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக தேங்கி நிற்கும் நீரில் டெங்கு கொசுக்கள் அதிகரிக்கின்றன. இதற்காக கிராமப்பகுதிகளில் தடுப்பு நட வடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். உடுமலை ரோடு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கிஉள்ளது. அதை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுப்பர்பாளையம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கியில் வட்டியில்லா கடன் திட்டத்தை நிறுத்தி விட்டதாக தெரிவிக்கின்றனர். இதனால்ஏழை விவசாயிகள் பாதிப்படைகின்றனர். கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மேற்கு பகுதியில் அனுமதி இல்லாமல் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கல் குவாரிக்குஅனுமதி கொடுத்தால் அப்பகுதியில் விவசாயமே பாதிப்படையும்.தென்னை மரங்களில்வெள்ளை ஈ தாக்குதல் தொடர்ந்துஉள்ளது. இதை கட்டுப்படுத்தஅரசே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணிக்கம்பட்டியில் தொடங்கி எஸ். நாகூர் வரையிலான கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சேர்வக்காரன் பாளையத்திலிருந்து குமாரபாளையம் செல்லும் வழியில் உள்ள தரைமட்டபாலத்தின்கீழ் 3 குழாய் தான் பதிக்கப்பட்டு உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் பாலத்திற்குமேல் செல்கிறது. இதனால் நடந்து செல்பவர்கள், வாகனங்கள் செல்ல முடியவில்லை. அதனால் தண்ணீர் செல்லும் குழாயை அதிகப்படுத்த வேண்டும். கால்நடை பராமரிப்புத் துறை மூலம் பசு மாடுகளுக்கு போடப்படும் சினை ஊசிக்குபலன் கிடைப்பதில்லை. பசு மாடு களுக்கு மடி வீக்க நோய் ஏற்பட்டு வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொள்ளாச்சியிலிருந்து செல்லும் அரசு டவுண் பஸ் எண் 18 மற்றும்18 ஏ பஸ்கள் நிர்ணயித்த ஊர்களுக்கு மட்டுமே சென்று வர வேண்டும். வழித்தடங்களை மாற்றி இயக்கக் கூடாது. ஆச்சி பட்டியலிருந்து சி.கோபாலபுரம் செல்லும் பாதையின் இருபுறமும் கழிப்பிடமாகப் பயன்படுத்துவதால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது.

ஆச்சிபட்டி ரேஷன் கடை பிற்பகலுக்கு மேல் இயங்குவதில்லை. இதனால் வேலைக்குச் செல்லும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பாதிப்படைகின்றனர். ஆகவே அதனை மாலை நேரங்களில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனைமலை பழைய ஆயக்கட்டுப் பகுதியில் 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தில சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. கூலி ஆட் கள்பற்றாக்குறை காரணமாக வேளாண்மை பொறியியல் துறை மூலம் வாடகை அடிப்படையில் நெல்அறு வடை எந்திரம் கடந்த 3 ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். ஆனால் இது வரை கிடைக்க வில்லை. மழை காலம் தொடர்வதால் இந்த ஆண்டாவது, நெல் அறுவடை எந்திரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் .

மேலும் நெல் அறுவடைக்கு இன்னும் 20 நாட்களே உள்ளதால் அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும். காரப்பட்டி வாய்காலின் ஓரத்தில்அரசு நிலத்தில் தனியார் தென்னங்கன்றுகள் நட்டு ஆக்கிரமித்துள்ளனர். அவைகளை அகற்ற வேண்டும். காட்டுப்பன்றிகள், மயில் தொல்லை அதிகரித்து வருகிறது. இவைகளால் விளை பொருட்கள் சேதமடைகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

சொட்டு நீர் பாசனத்திற்குமானியத் தொகையை அதிகப்படுத்த வேண்டும். சிறு, குறு விவசாயிகள் என்கிற வரைமுறைக்கு 10 ஏக்கராக அதிகப்படுத்த வேண்டும். காரப்பட்டி வாய்கால் ஓரங்களில் அரசு நிலத்தில் தனிநபர்கள் தென்னங் கன்றுகள் நட்டு ஆக்கிரமித்துள்ளனர்.அவை களை அகற்ற வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.

இதனை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் ஆர். ரவிக்குமார்பேசும்போது கூறிய தாவது:-

டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏ.டி.ஸ். வகை கொசு பழைய டயர்கள், கொட்டாங்குச்சி, பாத்திரம்,பிரிட்ஜ், போன்ற பொருட்களில் தேங்கி இருக்கும் தண்ணீரில் உற்பத்தி ஆகின்றன. அதனால் தேங்கி நிற்கும் நீரை கொட்டி விட வேண்டும். அனைத்து கிராமங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். குடிமராமத்து பணிகளை இந்த வார த்திற்குள் முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒதுக்கப்பட்ட நிதி ரத்து செய்யப்படும். நிதியை அடுத்த மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் மனு கொடுக்கலாம் .குளங்களின் ஓரங்களில் பனை மரங்கள் வளர்க்க பனை விதைகள்இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. தேவைப்படும் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம். இது வரை 1 லட்சம்பனை விதைகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன.ஓய்வு பெற்ற சர்வேயர்களை நிலம் அளவீடு செய்ய விவசாயிகள் அனுமதிக்கக் கூடாது. விவசாய நிலங்களுக்குமின் இணைப்பு கொடுக்கும் போது தடுப்பவர்களின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தாசில்தார்கள் வெங்கடாசலம் (ஆனைமலை), சங்கீதா (கிணத்துக்கடவு)உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் கே, சின்னசாமி, மெடிக்கல் பரமசிவம், முத்துசாமி, ஆறுமுகம், பட்டீசுவரன், ஆறுச்சாமி, நுகர்வோர் நலச்சங்கசெயலாளர் ரத்தினசாமி உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

Next Story