சேறும், சகதியுமாக காணப்பட்ட மேலப்பாளையம் ஆட்டுச்சந்தை சாலையில் வைத்து விற்பனை செய்ததால் போக்குவரத்து பாதிப்பு


சேறும், சகதியுமாக காணப்பட்ட மேலப்பாளையம் ஆட்டுச்சந்தை சாலையில் வைத்து விற்பனை செய்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2019 4:00 AM IST (Updated: 23 Oct 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

மேலப்பாளையம் ஆட்டுச்சந்தை சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் சாலையில் வைத்து ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெல்லை, 

மேலப்பாளையம் ஆட்டுச்சந்தை சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் சாலையில் வைத்து ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆட்டுச்சந்தை

தமிழகத்தில் எட்டயபுரம், மணப்பாறை, நெல்லை மேலப்பாளையம் ஆகிய ஊர்களில் நடைபெறுகின்ற ஆட்டுச்சந்தை தான் மிகப்பெரியது. இங்கு பல ஆயிரக்கணக்கான ஆடுகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவது வழக்கம். மேலப்பாளையம் ஆட்டுச்சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடைபெறும். இங்கு பல ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வரும். ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு தென்காசி, கடையநல்லூர், பாவூர்சத்திரம், கடையம், சங்கரன்கோவில், ஆலங்குளம், வள்ளியூர், கன்னியாகுமரி, காயல்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஆட்டு வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி லோடு ஆட்டோவில் ஏற்றி செல்வார்கள். இதனால் எப்பொழுதும் மேலப்பாளையம் சந்தை பரபரப்பாக காணப்படும்.

சேறும், சகதியுமாக...

வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை என்பதால் மக்கள் அதிக அளவில் ஆட்டு இறைச்சி எடுப்பார்கள். இதனால் நேற்று மேலப்பாளையம் ஆட்டுச்சந்தைக்கு அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்து இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நெல்லையில் பெய்த மழையால் ஆட்டுச்சந்தைக்குள் யாரும் செல்லமுடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தவர்களும், வியாபாரிகளும், சந்தையின் வாசலில் உள்ள சாலையில் வைத்து ஆடுகளை விற்பனை செய்தனர். மேலும் சந்தைக்கு ஆடுகள் வாங்க நேற்று பொதுமக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது.

Next Story