மாவட்ட செய்திகள்

நன்னிலம் அருகே, சாராயம்-மது விற்ற பெண் உள்பட 10 பேர் கைது + "||" + Near nunnilam 10 arrested, including a woman who sold alcohol

நன்னிலம் அருகே, சாராயம்-மது விற்ற பெண் உள்பட 10 பேர் கைது

நன்னிலம் அருகே, சாராயம்-மது விற்ற பெண் உள்பட 10 பேர் கைது
நன்னிலம் அருகே சாராயம், மது விற்ற பெண் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சுற்று வட்டார பகுதிகளில் நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசித்திராமேரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனபதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொம்மாநத்தம் சுடுகாடு பகுதியில் சாராயம் விற்ற 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், வண்டாம்பாளை கீழத்தெருவை சேர்ந்த பாரதிராஜா (வயது 37), செல்வபுரம் காலனி தெருவை சேர்ந்த பாலு (51), நாகக்குடியை சேர்ந்த ராஜேந்திரன் (55), சாத்தமங்கலத்தை சேர்ந்த செல்வம் (61) என்பது தெரியவந்தது. இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 440 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல வண்டாம்பாளை, திருப்பனையூர் ஆர்ச், நல்லமாங்குடி, செல்வபுரம் கைகாட்டி பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் சாராயம் விற்ற வண்டாம்பாளை வடக்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (56), ஆனைக்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்த சற்குருநாதன் (44), நல்லமாங்குடி வடக்கு தெருவை சேர்ந்த கலியபெருமாள் (60), பண்ணைவிளாகம் காலனி தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி லெட்சுமி (50) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 440 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நன்னிலம் அருகே தூத்துக்குடி பஸ் நிறுத்தத்தில் மது விற்ற அதே பகுதியை சேர்ந்த ராமன் (55), அச்சுதமங்கலம் மதகு அருகில் மது விற்ற அதே பகுதியை சேர்ந்த மணி (55) ஆகிய 2 பேரையும் நன்னிலம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் மோகன்பாபு வீட்டில் மிரட்டிய 4 பேர் கைது
நடிகர் மோகன்பாபு வீட்டில் மிரட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. நாகூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது
நாகூர் அருகே வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குத்திக்கொலை செய்யப்பட்டார். அவர் பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. குடிபோதையில் தகராறு: மனைவியை தீ வைத்து எரித்த தொழிலாளி கைது
கோவையில் குடிபோதையில் மனைவியை தீ வைத்து எரித்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
4. திருவாரூர் ரவுடி கொலையில் திடுக்கிடும் தகவல்: ஜாமீனில் எடுத்து நண்பர்களே தீர்த்துக்கட்டிய பயங்கரம்
திருவாரூரில் நடந்த பிரபல ரவுடி கொலை வழக்கில், அவரது நண்பர்களே ஜாமீனில் எடுத்து தீர்த்து கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 9 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. கணியம்பாடி வட்டாரத்தில் 350 பசுமாடுகளை திருடிய 2 பேர் கைது
கணியம்பாடி வட்டாரத்தில் 350 பசுமாடுகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.