மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடையில் லஞ்சம் வாங்கிய கலால் துறை உதவி கமிஷனர் கைது + "||" + Assistant Commissioner of Excise Department arrested for bribery

டாஸ்மாக் கடையில் லஞ்சம் வாங்கிய கலால் துறை உதவி கமிஷனர் கைது

டாஸ்மாக் கடையில் லஞ்சம் வாங்கிய கலால் துறை உதவி கமிஷனர் கைது
டாஸ்மாக் கடையில் லஞ்சம் வாங்கிய கலால் துறை உதவி கமிஷனர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்த ரூ.35ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
மதுரை,

மதுரை மாவட்ட கலால் துறையில் உதவி கமிஷனராக பணியாற்றி வருபவர் மாரிமுத்து(வயது 44). இவர் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள், தனியார் ஓட்டல்கள், கிளப்புகளில் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியசீலனுக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சத்தீயசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், பரமகுரு உள்ளிட்டோர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் மாரிமுத்துவை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.


இந்தநிலையில் நேற்று மாலை, மாரிமுத்து கருப்பாயூரணி அருகே உள்ள சீமான்நகரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் ஊழியர்களிடம் லஞ்சம் பெற்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். அப்போது அவரிடம் ரூ.35 ஆயிரம் இருந்தது. இந்த பணத்திற்குரிய எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் மதுரை மாவட்ட கலால் துறையில் உதவி கமிஷனராக பணியில் சேர்ந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே லஞ்சம் வாங்கியது தொடர்பாக பல புகார்கள் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டாஸ்மாக் கடை மேற்கூரையை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு
மதுரையில் டாஸ்மாக் கடை மேற்கூரையை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
2. செஞ்சி அருகே டாஸ்மாக் கடை திறக்க மீண்டும் பொதுமக்கள் எதிர்ப்பு
செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தில் ஊர் எல்லையிலும், குடியிருப்பு பகுதியின் மத்தியிலும் என 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன.
3. டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் - 24 பெண்கள் கைது
டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 24 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
4. டாஸ்மாக் கடையில் துளைபோட்டு கொள்ளை முயற்சி; 2 பேர் சிக்கினர்
புவனகிரி அருகே டாஸ்மாக் கடையில் துளைபோட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள், ரோந்து சென்ற போலீஸ்காரரிடம் சிக்கினார்.
5. டாஸ்மாக் கடை திறந்த பின்பு பரவலாக நடைபெறும் குற்ற சம்பவங்கள்
மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்த பின்பு கொலை சம்பவங்கள் உள்ளிட்ட குற்றவியல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் நிலை உள்ளதால் மாவட்ட போலீஸ் நிர்வாகம் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.