தண்டவாள பராமரிப்பு பணி: தென் மாவட்ட பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தென்மாவட்ட பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை,
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தென்மாவட்ட பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்-கோவை
மதுரை ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில் செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாகர்கோவில்-கோவை பாசஞ்சர் ரெயில் (வண்டி எண்.56319) இன்று (புதன்கிழமை) மற்றும் வருகிற 30-ந் தேதி ஆகிய நாட்களில் கோவில்பட்டி-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் கோவை-நாகர்கோவில் பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56320) இன்றும், வருகிற 25-ந் தேதி, 29-ந் தேதி மற்றும் 30-ந் தேதிகளில் திண்டுக்கல்-கோவில்பட்டி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில்கள் கோவில்பட்டி மற்றும் திண்டுக்கல் ரெயில் நிலையங்களில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்பட்டு செல்லும்.
திருச்செந்தூர்-பாலக்காடு
இதேபோல் பாலக்காடு-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56769) வருகிற 30-ந் தேதி விருதுநகர்-நெல்லை ரெயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. வருகிற 25, 29-ந் தேதிகளில் மதுரை-நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கத்தில், திருச்செந்தூர்-பாலக்காடு பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56770) வருகிற 30-ந் தேதி நெல்லை-விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது. வருகிற 25, 29-ந் தேதிகளில் நெல்லை-மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது.
செங்கோட்டை பாசஞ்சர்
செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் மதுரை பாசஞ்சர் ரெயில் இன்றும் மற்றும் வருகிற 25-ந் தேதியும் விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து மாலை 5 மணிக்கு செங்கோட்டை புறப்படும் பாசஞ்சர் ரெயில் இன்றும், வருகிற 25-ந் தேதியும் மதுரையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்படும்.
குருவாயூர், தூத்துக்குடி
சென்னையில் இருந்து குருவாயூர் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16127) இன்று, 25-ந் தேதி, 29-ந் தேதி மற்றும் 30-ந் தேதிகளில் வள்ளியூர், நாகர்கோவில் உள்ளிட்ட திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட ரெயில் நிலையங்களுக்கு சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்றடையும். இந்த ரெயிலுடன் இணைக்கப்படும் தூத்துக்குடி இணைப்பு ரெயில் (வ.எண்.16129) மேற்கண்ட நாட்களில் சுமார் 1½ மணி நேரம் தாமதமாக தூத்துக்குடி ரெயில் நிலையம் சென்றடையும்.
இந்த தகவல் மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story