தேர்தல் தோல்வி பயத்தால் பங்கஜா முண்டே மயங்கி இருக்கலாம் சரத்பவார் சொல்கிறார்


தேர்தல் தோல்வி பயத்தால் பங்கஜா முண்டே மயங்கி இருக்கலாம் சரத்பவார் சொல்கிறார்
x
தினத்தந்தி 23 Oct 2019 4:15 AM IST (Updated: 23 Oct 2019 4:07 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் தோல்வி பயத்தால் பங்கஜா முண்டே மயங்கி இருக்கலாம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.

மும்பை,

தேர்தல் தோல்வி பயத்தால் பங்கஜா முண்டே மயங்கி இருக்கலாம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.

மயங்கிய பங்கஜா முண்டே

மராட்டிய சட்டசபை தேர்தலில் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மந்திரி பங்கஜா முண்டேவை, அந்த தொகுதியில் அவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அவரது ஒன்று விட்ட சகோதரரான தனஞ் செய் முண்டே ஆபாசமாக பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற் படுத்தியது.

இந்த சம்பவத்தால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான மந்திரி பங்கஜா முண்டே பிரசார பொதுக்‌கூட்டம் ஒன்றில் பேசி கொண்டிருந்த போது, திடீரென மயக்கம் போட்டு விழுந்தார்.

தேர்தல் தோல்வி பயம்

இந்த நிலையில், மந்திரி பங்கஜா முண்டே தேர்தல் தோல்வி பயத்தில் மயங்கி விழுந்து இருக்கலாம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விமர்சித்து உள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

பங்கஜா முண்டே தனது 40 நிமிட உரையில் தனஞ்செய் முண்டேவுக்கு எதிராக தான் பேசினார். அப்போது அவருக்கு எதுவும் ஆகவில்லை. பேசி முடிக்கும் நேரத்தில் தான் மயங்கி விழுகிறார்.

பங்கஜா முண்டே பற்றி தனஞ்செய் முண்டே ஆபாசமாக பேசிய விரக்தியால் தான் அவர் மயங்கி விழுந்து விட்டதாக பா.ஜனதா தொண்டர்கள் கூறுகிறார்கள். ஆனால் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்ட சோர்வால் அவர் மயங்கி விட்டதாக பா.ஜனதா செய்தி தொடர்பாளர்கள் சொல்கிறார்கள்.

‘பஹினாபாய்’ என்று கூறியதற்காக ஒருவர் ஏன் மயங்க வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ‘பஹினாபாய்’ மராட்டியத்தின் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். பஹினாபாய் என்பதற்கு மராத்தியில் சகோதரி என்றும் பொருள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story