சட்டசபை தேர்தலில் ஓட்டு போடாதது ஏன்? சகன் புஜ்பால் விளக்கம்
சட்டசபை தேர்தலில் வாக்களிக்காதது பற்றி தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சகன் புஜ்பால் விளக்கம் அளித்து உள்ளார்.
நாசிக்,
சட்டசபை தேர்தலில் வாக்களிக்காதது பற்றி தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சகன் புஜ்பால் விளக்கம் அளித்து உள்ளார்.
சகன் புஜ்பால் வாக்களிக்கவில்லை
மராட்டிய சட்டசபை தேர்தல் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் காலையிலேயே வந்து வாக்களிக்க ஆர்வம் காட்டினார்கள். ஆனால் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரி பதவி வகித்தவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சகன் புஜ்பால் சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போடவில்லை.
ஊழல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்து இருக்கும் சகன் புஜ்பால் இந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் நாசிக் மாவட்டத்தில் உள்ள எவ்லா தொகுதியில் போட்டியிட்டு இருக்கிறார். அவரது ஓட்டு நாசிக் நகரத்தில் உள்ளது.
விளக்கம்
தேர்தலில் ஓட்டுப்போட வராதது பற்றி சகன் புஜ்பால் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காலையில் இருந்தே எவ்லா தொகுதியில் பல இடங்களில் வாக்குப்பதிவை பார்வையிட செல்வதில் தீவிரமாக இருந்தேன். பெரிய தொகுதி என்பதால் அங்குகூட என்னால் பல இடங்களுக்கு செல்ல முடியவில்லை.
இதனால் தான் என்னால் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனது. நான் எவ்லா தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story