வானவில்: ஸ்கோடா ஆக்டேவியா ஆனிக்ஸ்
சொகுசு கார்களைத் தயாரிக்கும் செக்கோஸ்லோவேகியாவைச் சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ‘ஆனிக்ஸ்’ என்ற பெயரிலான புதிய மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.
செடான் பிரிவில் ஆரம்ப விலைப் பிரிவில் இந்தக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.19.99 லட்சமாகும். டீசல் மாடல் விலை சுமார் ரூ.21.90 லட்சமாகும். இது கண்கவர் நிறங்களான கேன்டி ஒயிட், கோரிடா ரெட் மற்றும் புதிய ரேஸ் புளூ வண்ணத்தில் வந்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் ஆட்டோமேடிக் கியர் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டது. பெட்ரோல் மாடல் 1.8 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் கொண்டது. 180 ஹெச்.பி. திறன் 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது. 7 கியர்களுடன் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸைக் கொண்டு உள்ளது. டீசல் மாடல் 2 லிட்டர் டி.டி.ஐ. என்ஜினைக் கொண்டது.
இது 143 ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. டீசல் மாடல் 6 கியர்களைக் கொண்டதாக வந்துள்ளது. ஆக்டேவியா ஸ்டைல் வேரியன்டில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் இதிலும் இடம்பெற்றுள்ளன. 8 அங்குல தொடு திரை கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இயங்குதள வசதியோடு மிரர் லிங்க் இணைப்பு வசதி கொண்டது.
டியூயல் டோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி, டிரைவர் இருக்கையை தானியங்கி முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, இதேபோல பயணிகள் இருக்கையையும் அட்ஜெஸ்ட் செய்வது கூடுதல் சிறப்பாகும். ஆட்டோமேடிக் வைபர் வசதியோடு 6 ஏர் பேக்குகள், ஏ.பி.எஸ்., இ.பி.டி., பிரேக் அசிஸ்ட் வசதிகளை உள்ளடக்கியதாக இது வந்து உள்ளது. அத்துடன் கூடுதலாக டிராக்ஷன் கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா, முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார் ஆகியவையும் இதில் உள்ளன.
இப்புதிய செடான் மாடல் கார் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஹூண்டாய் எலன்ட்ரா, டொயோட்டா கொரோலா ஆல்டிஸ், ஹோண்டா சிவிக் ஆகிய மாடல் கார்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Related Tags :
Next Story