ஓமன் நாட்டில் இறந்து கரை ஒதுங்கிய மீனவர்களின் உடலை கொண்டு வர கலெக்டர் கடிதம்
ஓமன் நாட்டில் கரை ஒதுங்கிய நம்புதாளையைச் சேர்ந்த 2 மீனவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கலெக்டர் வீரராகவ ராவ் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ராமநாதபுரம்,
தொண்டி அருகே உள்ள நம்புதாளையைச் சேர்ந்த மீனவர்கள் கார்மேகம், ராமநாதன், காசிநாதன், காசிலிங்கம் உள்பட 8 மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஓமன் நாட்டிற்கு ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்றனர். இவர்கள் கடந்த மாதம் 16-ந்தேதி ஓமன் நாட்டில் உள்ள மஜ்ஜிதா தீவு பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்றிருந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி ஓமன் நாட்டின் கடற்கரை பகுதியில் ஹிக்கா என்ற கோர புயல் தாக்கியது. இந்த புயலில் சிக்கிய மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்த நிலையில் மஜ்ஜிதா தீவுப்பகுதியில் 2 பேரின் உடல்கள் கரை ஒதுக்கின. மற்றவர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.
மாயமான மீனவர்களை மீட்ககோரி அவர்களது குடும்பத்தினர் கலெக்டர் வீரராகவ ராவிடம் மனு அளித்தனர். இந்த நிலையில் கரை ஒதுங்கிய 2 பேரின் உடல்களை டி.ஏன்.ஏ. பரிசோதனை செய்ததில் அவர்கள் காசிலிங்கம், கார்மேகம் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. 2 பேரின் உடல்களும் ஓமன் நாட்டில் உள்ள ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசு விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுத்துறை செயலர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறைக்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கடிதம் எழுதியுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story