காரில் கஞ்சா கடத்திய வழக்கு: தெலுங்கானா வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்


காரில் கஞ்சா கடத்திய வழக்கு: தெலுங்கானா வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 24 Oct 2019 3:45 AM IST (Updated: 24 Oct 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

காரில் கஞ்சா கடத்திய வழக்கில் தெலுங்கானா வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

மதுரை,

தெலுங்கானாவில் இருந்து தேனிக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக கடந்த ஆண்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தேனி-பெரிய குளம் சாலையில் மதுராபுரி அருகே நடந்த சோதனையின்போது வந்த காரை போலீசார் நிறுத்தினர். அந்த காரில் சோதனை நடத்தியபோது 140 கிலோ கஞ்சா மூடை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து கஞ்சா மூடையை பறிமுதல் செய்யப்பட்டதுடன், தெலுங்கானாவை சேர்ந்த வட்டீபு நரேஷ் (வயது 28) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.

முடிவில், கஞ்சா கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வட்டீபு நரேசுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி பத்மநாபன் நேற்று தீர்ப் பளித்தார்.

Next Story