மது குடித்ததை தட்டிக்கேட்டதால் தகராறு: விஷம் குடித்த தொழிலாளி சாவு- மனைவிக்கு தீவிர சிகிச்சை
எழுமலை அருகே மது குடித்துவிட்டு வந்ததை தட்டிக்கேட்டதால் தகராறு ஏற்பட்டு ஒரே நேரத்தில் தொழிலாளியும், அவருடைய மனைவியும் விஷம் குடித்தனர். இதில் தொழிலாளி சிகிச்சை பலன் அளிக்கமால் பரிதாபமாக உயிரிழந்தார்.
உசிலம்பட்டி,
எழுமலை அருகே உள்ளது டி.பெருமாள்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த ராமர் மகன் ராமச்சந்திரன்(வயது28). கூலி தொழிலாளியான இவருக்கும் பாக்கியலட்சுமி என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் ரீகாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் ராமச்சந்திரன் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவரின் மனைவி பாக்கியலட்சுமி கணவரை பார்த்து ஏன் இப்படி குடித்துவிட்டு வந்தீர்கள் என்று தட்டிக்கேட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதைப் பார்த்த பாக்கியலட்சுமியும் அதே பூச்சிமருந்தை எடுத்து குடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 2 பேரும் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த உறவினர்கள், அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு ராமச்சந்திரன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். பாக்கியலட்சுமி தொடர்ந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Related Tags :
Next Story