கட்டுமான அதிபரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை தானே கோர்ட்டு தீர்ப்பு

கட்டுமான அதிபரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை தானே கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 24 Oct 2019 4:30 AM IST (Updated: 24 Oct 2019 4:51 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான அதிபரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தானே கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

தானே,

கட்டுமான அதிபரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தானே கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

ரூ.50 ஆயிரம் லஞ்சம்

நவிமும்பை சிட்கோ பவனில் பெண் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் சுனந்தா. இவரிடம் கட்டுமான அதிபர் ஒருவர் புதிதாக வாங்கிய இடத்திற்கு பெயர் மாற்றம் செய்து தரும்படி விண்ணப்பித்து இருந்தார். இதற்கு அதிகாரி சுனந்தா ரூ.50 ஆயிரம் லஞ்சம் தந்தால் பெயர் மாற்றம் செய்து தருவதாக தெரிவித்தார்.

இந்தநிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் ரசாயன பொடி தடவிய ரூ.50 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து அனுப்பினர்.

5 ஆண்டு சிறை

இதன்படி அவர் அலுவலகத்தில் இருந்த சுனந்தாவை சந்தித்து பணத்தை கொடுத்தார். பணத்தை பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பெண் அதிகாரியை கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் தானே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அவர் மீதான குற்றம் தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு பெண் அதிகாரி சுனந்தாவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

Next Story