இன்று வாக்கு எண்ணிக்கை: காமராஜ் நகர் தொகுதியில் வெற்றி யாருக்கு? பகல் 12 மணிக்குள் முடிவு தெரியும்
காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. தேர்தல் முடிவுகள் பகல் 12 மணிக்குள் தெரியும்.
புதுச்சேரி,
காமராஜ் நகர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த வைத்திலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான காமராஜ் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன் உள்பட 9 பேர் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு கடந்த 21-ந்தேதி நடந்தது. இங்கு 69.44 சதவீதம் வாக்குகள் பதிவானது.
அதாவது மொத்தம் உள்ள வாக்காளர்கள் 35 ஆயிரத்து 9 பேரில் 24 ஆயிரத்து 310 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டன. அங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததால் பல்வேறு கணக்குகளை போட்டு ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் வெற்றிவாய்ப்பு தங்களுக்குத் தான் என்று கூறி வருகின்றன. இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை நடக்கும் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திற்குள் தேர்தல் துறையின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 11 மேஜைகள் போடப்பட்டு 3 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடை பெறும்.
காலை 10.30 மணிக்கு முன்னணி நிலவரங்கள் தெரிய வரும். பகல் 12.30 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அப்போது காமராஜ் நகர் தொகுதியை கைப்பற்றியது யார்? என்ற விவரம் தெரிய வரும்.

Related Tags :
Next Story