செண்பகத்தோப்பு அணையில் இருந்து வீணாகும் தண்ணீர்
செண்பகத்தோப்பு அணையில் இருந்து தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே படவேடு செண்பகத்தோப்பு அணையில் சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அணையில் ஷட்டர் இல்லாததால் தண்ணீர் அனைத்தும் ஆற்றில் வீணாக செல்கிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.
ஏற்கனவே இந்த அணை கட்டும்போது அமைத்த ஷட்டர் இயங்கவில்லை. இதனால் பல ஆண்டுகளாக செண்பகத்தோப்பு அதன் முழு கொள்ளளவு தண்ணீர் நிரம்ப வழியில்லாமல் உள்ளது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. செண்பகத்தோப்பு அணையை மறுசீரமைப்பு செய்து, ஷட்டர் அமைக்காவிட்டால் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்து இருந்தார்.
அதனைத்தொடர்ந்து விரைவில் ஷட்டர் அமைக்க அரசு முடிவு செய்தது. அதன்படி செண்பகத் தோப்பு அணை மறுசீரமைப்பு உள்பட பல்வேறு பணிகளுக்கு ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்து விரைவில் டெண்டர் விடப்படும் என்று அறிவித்துள்ளது.
ஆனால் காலதாமதம் காரணமாக மழை பெய்யும் காலங்களில் தண்ணீர் நிரம்ப போதுமான வசதிகள் இல்லை. எனவே செண்பகத்தோப்பு அணையை விரைந்து மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும், ஷட்டர் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story