விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றி அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைதொடர்ந்து அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
செங்கல்பட்டு,
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அதனை கொண்டாடும் வகையில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கவுஸ் பாஷா தலைமையில் அ.தி.மு.க.வினர் சிங்கப்பெருமாள் கோவில் அ.தி.மு.க. அலுவலகத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதில் ஒன்றிய துணை செயலாளர் வடகால் மாரி, ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் சந்தான கிருஷ்ணன் ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.எம். ரவி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சதீஷ், திருத்தேரி அ.தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் மாரி தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் ராஜாமாணிக்கம், குன்றத்தூர் வடக்கு ஒன்றிய பா.ம.க. செயலாளர் தேவேந்திரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கும்மிடிப்பூண்டியில் கே.எஸ்.விஜயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். ஒன்றிய செயலாளர் வி.கோபால் நாயுடு, நகர செயலாளர் மு.க.சேகர், நிர்வாகிகள் ரவி, ஓடைராஜேந்திரன், டி.சி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே திருவள்ளூர் முன்னாள் நகர் மன்ற தலைவரும், அ.தி.மு.க. திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைச்செயலாளருமான கமாண்டோ அ.பாஸ்கரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் எஸ்.ஏ நேசன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.
நிகழ்ச்சியில் பேரவைத்தலைவர் லோகநாதன், கூட்டுறவு சங்க தலைவர் வளையாபதி, அ.தி.மு.க. நிர்வாகிகள் ராமதாஸ், சீனிவாசன், அண்ணாதுரை, சின்னசாமி, ராகவன், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story