தூத்துக்குடி அருகே கட்டிட தொழிலாளி சாவில் திடீர் திருப்பம் உறவினர் அடித்து கொலை செய்தது அம்பலம்


தூத்துக்குடி அருகே கட்டிட தொழிலாளி சாவில் திடீர் திருப்பம் உறவினர் அடித்து கொலை செய்தது அம்பலம்
x
தினத்தந்தி 25 Oct 2019 3:30 AM IST (Updated: 25 Oct 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே கட்டிட தொழிலாளி இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை உறவினரே அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே கட்டிட தொழிலாளி இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை உறவினரே அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

கட்டிட தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பொன்னங்குறிச்சியை சேர்ந்தவர் காந்தாரி (வயது 45). இவரின் உறவினர் தூத்துக்குடியை சேர்ந்த பொன்னு (33). இவர்கள் 2 பேரும் கட்டிட தொழிலாளிகள். இவர்கள் உள்பட தொழிலாளிகள் சிலர் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பவானி நகரில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 12-ந்தேதி இரவு பொன்னு மற்றும் காந்தாரி ஆகியோர் அந்த கட்டிடத்தில் மது குடித்துவிட்டு தூங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மறுநாள் காந்தாரி உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த குமாரகிரி கிராம நிர்வாக அலுவலர் திரேசம்மாள் புதுக்கோட்டை போலீ்ஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். உடல் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலை வழக்கு

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் காந்தாரி அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து புதுக்கோட்டை போலீசார் பொன்னுவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சம்பவத்தன்று சம்பவ இடத்தில் 2 பேரும் மது அருந்தியதும், அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 2 பேரும் ஒருவரை ஒருவர் அங்கு கிடந்த கம்பால் தாக்கியதும் இதில் காந்தாரி உயிர் இழந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பொன்னுவை கைது செய்தனர்.

Next Story