அருமனை அருகே டியூசன் ஆசிரியையை கத்தியால் குத்திய மாணவன் கைது
அருமனை அருகே டியூசன் ஆசிரியையை கத்தியால் குத்திய மாணவனை போலீசார் கைது செய்தனர்.
அருமனை,
அருமனை அருகே கடையாலுமூடு பகுதியில் பி.எஸ்சி., பி.எட். படித்த 23 வயதுடைய பட்டதாரி பெண் ஒருவர் தனது வீட்டில் டியூசன் எடுத்து வருகிறார். இவரிடம் பக்கத்து வீட்டை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் உள்பட பலர் டியூசன் படித்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று ஆசிரியையின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் ஆசிரியை மட்டும் தனியாக இருந்தார். அப்போது, பிளஸ்-1 மாணவன் ஆசிரியை வீட்டுக்கு சென்று பேசிக்கொண்டிருந்தான். அவரும் மாணவனிடம் சகஜமாகப் பேசினார்.
கத்திக்குத்து
அப்போது திடீரென்று மாணவன் ஆசிரியையின் கையை பிடித்து இழுத்து அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றான். இதனால், பயந்து போன ஆசிரியை அலறினார். உடனே, மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியையை சரமாரியாக குத்துவிட்டு தப்பி ஓடிவிட்டான். இதில் ஆசிரியையின் வயிறு, தலை போன்ற இடங்களில் காயம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காயமடைந்த அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கடையாலுமூடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டியூசன் ஆசிரியையை மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story