நம்பிக்கையோடு அரசியல் பயணத்தை தொடர்வோம் - கண்ணன் உறுதி
நம்பிக்கையோடு அரசியல் பயணத்தை தொடர்வோம் என்று மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் கண்ணன் கூறியுள்ளார்.
புதுச்சேரி,
மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காமராஜ் நகர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமாருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரத்தில் எங்களுக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
ஜனநாயகத்தின் முடிவுகள் எப்படியிருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு எங்களின் அரசியல் பயணத்தை தொடர்வோம்.
இன்னும் கூடுதலாக மக்களுக்கான பணிகளை மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் முன்னெடுக்கும். தொடர்ந்து மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.
வாழ்க இந்திய ஜனநாயகம். குறிப்பாக புதுச்சேரி ஜனநாயகத்துக்கு பெரிய வாழ்த்துகள்.
இவ்வாறு கண்ணன் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story