ஒர்லி தொகுதியில் ஆதித்ய தாக்கரே அபார வெற்றி பால்தாக்கரே குடும்பத்தில் முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்டவர்


ஒர்லி தொகுதியில் ஆதித்ய தாக்கரே அபார வெற்றி பால்தாக்கரே குடும்பத்தில் முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்டவர்
x
தினத்தந்தி 25 Oct 2019 5:30 AM IST (Updated: 25 Oct 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபை தேர்தலில் பால்தாக்கரே குடும்பத்தில் முதன்முறையாக போட்டியிட்ட ஆதித்ய தாக்கரே 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

மும்பை, 

மராட்டிய சட்டசபை தேர்தலில் பால்தாக்கரே குடும்பத்தில் முதன்முறையாக போட்டியிட்ட ஆதித்ய தாக்கரே 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

ஆதித்ய தாக்கரே போட்டி

மராட்டிய சட்டசபை தேர்தலில் மும்பையில் உள்ள ஒர்லி தொகுதியில் சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே போட்டியிட்டார். இவர் மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் பேரனும், தற்போதைய சிவசேனா தலைவரின் மகனும் ஆவார். பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்டவர் ஆதித்ய தாக்கரே ஆவார்.

எனவே ஒர்லி தொகுதியானது நட்சத்திர அந்தஸ்து பெற்றது. ஆதித்ய தாக்கரேவை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுரேஷ் மானே, வஞ்சித் பகுஜன் அகாடியை சேர்ந்த கவுதம் அன்னா கெய்க்வாட், பகுஜன் சமாஜ் கட்சியின் விஸ்ராம் படாம் உள்ளிட்ட 13 பேர் போட்டியிட்டனர்.

67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்

இதில் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆதித்ய தாக்கரே முன்னிலை வகித்தார். முதல் சில சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவிலேயே ஆதித்ய தாக்கரே தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரை விட 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றார். இதனால் அப்போதே அவரது வெற்றி உறுதியானது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஆதித்ய தாக்கரே 89 ஆயிரத்து 248 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரசின் சுரேஷ் மானே 21 ஆயிரத்து 821 வாக்குகள் மட்டுமே பெற்றார். ஆதித்ய தாக்கரே 67 ஆயிரத்து 427 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்ற பிரமாண்ட வெற்றியை ஒர்லி தொகுதியில் சிவசேனா கட்சியினர் இசை வாத்தியங்கள் முழங்க ஆடிப்பாடி உற்சாகமாக கொண்டாடினர்.

Next Story