தர்மஸ்தாலாவில் இயற்கை சிகிச்சையில் இருந்தபோது சித்தராமையா என்ன செய்தார் என்று எனக்கு தெரியும் தேவேகவுடா பேட்டி


தர்மஸ்தாலாவில் இயற்கை சிகிச்சையில் இருந்தபோது சித்தராமையா என்ன செய்தார் என்று எனக்கு தெரியும் தேவேகவுடா பேட்டி
x
தினத்தந்தி 26 Oct 2019 4:00 AM IST (Updated: 25 Oct 2019 11:17 PM IST)
t-max-icont-min-icon

தர்மஸ்தாலாவில் இயற்கை சிகிச்சையில் இருந்த போது, சித்தராமையா என்ன செய்தார் என்று எனக்கு தெரியும் என தேவேகவுடா கூறியுள்ளார்.

பெங்களூரு, 

தர்மஸ்தாலாவில் இயற்கை சிகிச்சையில் இருந்த போது, சித்தராமையா என்ன செய்தார் என்று எனக்கு தெரியும் என தேவேகவுடா கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வாயில் துப்பாக்கி

குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை குறைத்ததால், யாதகிரியில் எங்கள் கட்சியின் இளைஞர் அணி நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். முதல்-மந்திரியை அவமதிக்கும் வகையில் அவர்கள் செயல்படவில்லை. ஆனால் யாதகிரி போலீசார் எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு போட்டுள்ளனர். மேலும் போலீசார், எங்கள் கட்சியினரை கடுமையாக அடித்து உதைத்துள்ளனர்.

போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று வாயில் துப்பாக்கி வைத்து மிரட்டியுள்ளனர். ‘பெல்ட்‘டால் போலீசார் அடித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் உள்பட போலீசாரை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். கூட்டணி அரசை கவிழ்த்தவர்கள் யார் என்பது எனக்கு தெரியும்.

எங்களுக்கு தண்டனை

சித்தராமையா பாதாமிக்கு சென்று எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டதால் கூட்டணி ஆட்சிக்கு சித்தராமையா ஒப்புக்கொண்டார். எனது வீட்டுக்கே வந்து ஆட்சி அமைக்க கேட்டுக் கொண்டனர். இறுதியில் எங்களுக்கு தண்டனை கொடுத்துவிட்டனர். தர்மஸ்தாலாவில் இயற்கை சிகிச்சையில் இருந்தபோது, சித்த ராமையா யாருடன் பேசி என்ன செய்தார் என்று எனக்கு தெரியும்.

தாராள வர்த்தக ஒப்பந்தம் மூலம் வெளிநாடுகளில் இருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசின் இந்த முடிவை நான் கடுமையாக எதிர்க்கிறேன். இதற்கு எதிராக தீவிர போராட்டம் நடத்துவேன்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Next Story