அடுத்த மாதத்துக்குள் ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் தகவல்

அடுத்த மாதத்துக்குள் ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் தகவல்
x
தினத்தந்தி 26 Oct 2019 3:30 AM IST (Updated: 26 Oct 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை அடுத்த மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

நெல்லை, 

வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை அடுத்த மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

உயிர்வாழ் சான்றிதழ்

நெல்லை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் அனைவரும் அடுத்த ஆண்டுக்கான தங்களது உயிர்வாழ் சான்றிதழை ஆதார் எண் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஓய்வூதியம் பெறும் வங்கி கிளைகளில் அடுத்த மாதத்துக்குள் (நவம்பர்) சமர்ப்பித்து தங்களது ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் வங்கி கிளைகளில் செய்யப்பட்டு உள்ளது எனவே ஓய்வூதியர்கள் அனைவரும் தங்கள் வங்கி கிளைகளிலேயே உயிர்வாழ் சான்றிதழை இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஓய்வூதியர்கள் நெல்லை மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் அலுவலகத்துக்கு வரவேண்டியது இல்லை.

பொது சேவை மையங்கள்

மேலும் அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும் போது ஓய்வூதிய எண், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு, செயல்பாட்டில் உள்ள செல்போன் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story