திருமருகலில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
திருமருகலில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமருகல்,
நாகை மாவட்டம் திருமருகல் பஸ் நிலையம் முன் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மார்ட்டின், கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் முருகேசபாண்டியன், நாகை ஒன்றிய செயலாளர் நிர்மல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் குடும்பன், காலாடி, பண்ணாடி, பள்ளன், வாதிரியார், மூப்பன், தேவேந்திரகுலத்தான் ஆகிய உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசு அறிவித்து அதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் முரளி, சந்திரசேகரன், பிருந்தாவன், சதீஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் திருமருகல் ஒன்றிய பொறுப்பாளர் கண்ணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story